
ஸ்தாபக மற்றும் மூத்த போதகர், லைஃப் ச்சர்ச்-ன் சிறந்த புத்தக ஆசிரியர்

நிறுவனர், ஹேபிட்ஸ் அகாடமி சிறந்த புத்தக ஆசிரியர்

சமூக தொழில்முனைவோர், ஒளிபரப்பாளர், ஆசிரியர் & பேச்சாளர் நிறுவனர், த சேங்ச்சுவரி பவுண்டேஷன்

முன்னணி போதகர், ஹோப் ரேஸ்டரேஷன் மினிஸ்ட்ரிஸ் லீடர்ஷிப் கன்சல்டன்ட் புத்தக ஆசிரியர்

போதகர், ஆசிரியர், பொதுப் பேச்சாளர்

கிடியன்ஸ் இன்டர்நேஷனல் முன்னாள் தெற்காசிய இயக்குனர்

கல்வித் துறையில் சூரத் நகரின் 'ஐகான்'

படைப்பாளர், இயக்குனர், மற்றும் த ச்சோசன் தொடரின் இணை எழுத்தாளர்

பேச்சாளர், ஆசிரியர் போதகர், வில்லோ க்ரீக் கம்யூனிட்டி ச்சர்ச்
© 2024 The Global Leadership Summit • All Rights Reserved

ஸ்தாபக மற்றும் மூத்த போதகர், லைஃப் ச்சர்ச்-ன்
சிறந்த புத்தக ஆசிரியர்
உலகளவில் தலைவர்களின் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட க்ரெய்க் க்ரோஸ்ச்செல் லைஃப் ச்சர்ச்-ன் நிறுவனர் மற்றும் மூத்த போதகர் ஆவார். சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் மிஷினரி அணுகுமுறைக்கு பெயர் பெற்ற லைஃப் ச்சர்ச், வாரந்தோறும் 85,000 பேர் வருகையுடன் 40 வளாகங்களில் ஆன்லைன் மற்றும் நேரில் ஆராதனைகளை நடத்தி வருகிறார்கள். உலகளவில் அரை பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட YouVersion Bible App-ஐ உருவாக்கியவர்கள் இவர்களே. 2020 ஆம் ஆண்டில் சுகாதாரத் தொற்றுநோய் நிமித்தம் உலகமே ஸ்தம்பித்து போன நிலையில், திருச்சபைகள் மெய்நிகர் செயலிகளின் மூலம் வார்த்தையை கொண்டு செல்வதற்கு இலவச கருவிகளை திருச்சபைகளுக்கு வழங்குவதில் முன்னோடியாக லைஃப் சர்ச் முக்கிய பங்காற்றியது. உலகளாவிய தலைமைத்துவ உச்சிமாநாட்டின் சார்பாக ,சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் தலைவர்களை உருவாக்க அவர் பிரயாசப்படுகிறார். அவர் நியூயார்க் டைம்ஸின் சிறந்த எழுத்தாளர் பட்டியலில் இடம்பெற்றவர் மற்றும் க்ரெய்க் க்ரோஸ்ச்செல் அவர்கள், லீடர்ஷிப் பாட்காஸ்டின் சிறந்த தொகுப்பாளரும் ஆவார்.

நிறுவனர், ஹேபிட்ஸ் அகாடமி
சிறந்த புத்தக ஆசிரியர்
ஜேம்ஸ் க்ளியர் நல்ல பழக்கத்தை உருவாக்குவதில் உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவர். அவரது நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் படி சிறந்த விற்பனையான புத்தகத்தின் தலைப்பு 'அணு பழக்கம்' என்ற புத்தகம். இது புத்தகம் உலகளவில் 10 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளது, அதோடு கூட இப்புத்தகம் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமேசானில் 2021-ம் ஆண்டின் சிறந்த விற்பனையான புத்தகமாகவும், ஆடிபிள் மின்-புத்தக செயலியில் முதலிடம் வகித்தது. அன்றாட வாழ்க்கைக்கும் வேலைக்கும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தலைப்புகளை எளிமையான நடையில் விவரிக்கும் அவரது திறனுக்காக அவர் அறியப்பட்டவர், க்ளியரின் “3-2-1” மின்னஞ்சல் செய்திமடல் ஒவ்வொரு வாரமும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படுகிறது. மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உட்பட பல பார்ச்சூன் 500 நிறுவனங்களில் அவர் தனது போதனைகளை பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளார். அவரது கட்டுரைகள் டைம் பத்திரிக்கை, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் சிபிஎஸ் திஸ் மார்னிங் ஆகிய பத்திரிக்கைகளில் இடம்பெற்றுள்ளது.

சமூக தொழில்முனைவோர், ஒளிபரப்பாளர், ஆசிரியர் & பேச்சாளர்
நிறுவனர், த சேங்ச்சுவரி பவுண்டேஷன்
டாக்டர். க்ரிஷ் கான்டியா ஒரு சமூக தொழில்முனைவோர், சமூகத்தின் சில தீர்க்க முடியாத பிரச்சனைகளை சிவில் சமூகம், நம்பிக்கை சமூகங்கள், அரசாங்கம் மற்றும் பரோபகாரம் ஆகியவற்றில் கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலம் தீர்க்க உதவும் தொலைநோக்கு பார்வை கொண்டவர். இவர், ஐக்கிய இராச்சியத்தில் அகதிகளை வரவேற்பதற்கும், அவர்களுக்கு வேலை மற்றும் தங்கும் இடங்களை ஏற்பாடு செய்வதற்கும் செயல்படும் தொண்டு நிறுவனமான த சேங்ச்சுவரி பவுண்டேஷனின் நிறுவனர் ஆவார். கிரிஷ் அகதிகள் மீள்குடியேற்றம், குழந்தைகள் நல சீர்திருத்தம், கல்வியில் புதுமை மற்றும் சிவில் சமூக அணிதிரட்டல் ஆகிய துறைகளில் நிபுணராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டவர். அவர் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் தத்தெடுப்பு மற்றும் சிறப்பு பாதுகாவலர் தலைமை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார், அங்கு அவர் பராமரிப்பு அமைப்பில் ஆதரவற்ற சிறு பிள்ளைகளுக்கான நிரந்தர அன்பான குடும்பங்களை கண்டுபிடிப்பதற்கு மூலோபாய தலைமையை கொண்டு வருகிறார். அவர் ஒரு பிறந்த பெற்றோர், தற்காலிக வளர்ப்பு பெற்றோர், வளர்ப்பு பெற்றோராக செயல்பட்டு உலகளவில் பாதிக்கப்படக்கூடிய பிள்ளைகளுக்காக வழக்கறிஞராகவும் செயல்படுகிறார்.

முன்னணி போதகர், ஹோப் ரேஸ்டரேஷன் மினிஸ்ட்ரிஸ் லீடர்ஷிப் கன்சல்டன்ட் புத்தக ஆசிரியர்
ஹோப் ரேஸ்டரேஷன் ஊழியங்களின் முன்னணி போதகராகவும், தரிசனத் தலைவராக இருக்கும் போதகர் கிறிஸ் மத்தேபுலா அவர்கள், கௌடெங்கில் ஏழு கிளை வளாகங்களைக் கொண்டிருக்கும், 20000 விசுவாசிகள் ஆராதித்து வரும் சபையையும் நடத்தி வருகிறார். தென்னாப்பிரிக்காவின் கெம்ப்டன் பார்க்க-ல் உள்ள குளூர்கோப்பில் இதன் முதன்மை வளாகம் அமைந்துள்ளது. த பீப்பிள் மேட்டர் டு காடு என்ற மனிதநேய அமைப்பின் நிறுவனரும், தி டிவோட் தட் சிட்டிசன் மூவ்மெண்ட் அமைப்பின் ஸ்தாபகர் இவரே. கிறிஸ் ஒரு அர்ப்பணிப்புள்ள குடிமகன், எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் தலைமை ஆலோசகர். அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியான "ஹோப் அலைவ்" தொடர்ந்து வெயிட் டிவி, ஒன் காஸ் பெல், ட்ரேஸ் காஸ்பெல் மற்றும் இதர உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களில் ஒளிபரப்பப்படுகிறது. அவர் ஒன்பது புத்தகங்களை எழுதியவர், "டிவோட் சிட்டிசன்" என்ற தலைப்பில் சமீபத்திய புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.

போதகர், ஆசிரியர், பொதுப் பேச்சாளர்
எர்வின் ரஃபேல் மெக் மானஸ் ஒரு மனதைக் கட்டி எழுப்பும் கலைஞர் மற்றும் விருது பெற்ற எழுத்தாளரும் கலைஞரும் ஆவார். இவரது புத்தகங்கள் ஒரு மில்லயனுக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது 12-க்கும் அதிகமான மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு மனதைக் கட்டி எழுப்பும் கலைஞர் என்ற முறையில், மெக் மானஸ் கடந்த 30 ஆண்டுகளாக சி.இ.ஓ-க்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், பில்லியன் டாலர் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உலகத் தலைவர்களுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி அளித்து வருகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது புதிய புத்தகம், மைண்ட் ஷிப்ட்: இட் டஸ் நாட் டேக் எ ஜீனியஸ் டு திங்க் லைக் ஒன், அக்டோபர் 2023-ல் வெளியிடப்படும்.

கிடியன்ஸ் இன்டர்நேஷனல் முன்னாள்
தெற்காசிய இயக்குனர்
கர்னல் (ஓய்வு) நவ்நீத் சாப்ரா, இந்தியாவின் புனேவில் உள்ள கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாடமியின் (NDA) முன்னாள் மாணவர் ஆவார். 1987-ல் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்திய ராணுவத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
ஒரு கேப்டனாக, அவர் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை குழுவில் பயிற்றுவிப்பாளராக இருந்தார். மேஜராக அவர் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) உயரடுக்கு சிறப்புப் படைகளின் ஒரு பகுதியாக பணியாற்றினார். ஒரு கர்னலாக அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள உரியில் கட்டுப்பாட்டுக் கோட்டில், 19 அதிகாரிகள் மற்றும் 900 வீரர்களுடன் இயங்கிவந்த தனது சொந்த 14-வது ராஜ்புத் பெட்டாலியனின் தலைவராக பணிபுரிந்தார்.
இராணுவத்தில் அவரது பதவிக்காலம் அவரை தந்திரோபாய மற்றும் செயல்பாட்டு மட்டத்தில் ஒரு தலைவராக வளர்த்தது. தலைமைத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் அவருக்குள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய போது மூன்று முறை அவருக்கு விருந்து வழங்கப்பட்டது. ஒரு விருது அவரது வீரத்திற்காகவும், இரண்டு விருதுகள் அவரது சிறப்பான சேவைக்காகவும் வழங்கப்பட்டது.
கர்னல் நவ்நீத், இந்திய ராணுவத்திலிருந்து முதிர்ச்சிக்கு முன் ஓய்வு பெற்று, இந்தியாவில் உள்ள தி கிடியான்ஸ் இன்டர்நேஷனலில் அதன் செயல் இயக்குநராக சேர்ந்தார். அவர் தனது பலம் மற்றும் திறமைகளை, ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தில் பயன்படுத்த விரும்பினார். அவர் 13 ஆண்டுகளாக இந்தியாவில் தி கிடியன்ஸ் இன்டர்நேஷனலில் சேவை செய்தார், மேலும் இந்தியாவில் உள்ள கிடியன்ஸ் இன்டர்நேஷனல் அவர் பணியாற்றிய 13 ஆண்டுகளில் பல மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்தது. 2019 முதல் 2022 வரை நவ்நீத் தி கிடியன்ஸ் இன்டர்நேஷனல் (அமெரிக்கா)-வின் சர்வதேச இயக்குநராகப் பணியாற்றினார், சீனா உட்பட 36 நாடுகளை உள்ளடக்கிய ஆசியா மற்றும் பசிபிக் பகுதியை மேற்பார்வையிட்டார்.
தற்போது, அவர் டல்லாஸ் தியாலஜிகல் செமினரியில் முதுகலைப் படிப்பைத் தொடர்கிறார் மற்றும் மூன்று இலாப நோக்கற்ற சர்வதேச நிறுவனங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.

கல்வித் துறையில் சூரத் நகரின் 'ஐகான்'
ஆண்ட்ரூ ஜெயச்சந்திரன் நாடார் அவர்கள் எல்லா விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒருவராவார். ஒரு கல்வியாளர் என்பதை தவிர, அவர் ஒரு எழுத்தாளர், பட்டய கணக்காளர், ஆராய்ச்சியாளர் மற்றும் அவர் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவிய பொது பேச்சாளரும் ஆவார். வணிகவியல் மாணவர்களுக்கான சூரத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றின் இயக்குநராக இயங்கிவரும் இவர், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையையே மாற்றியமைத்து வருகிறார்.
கல்வித் துறையில் ஆண்ட்ரூவுக்கு 'ஐகான் ஆஃப் சூரத்' என்ற பட்டம் வழங்கப்பட்டது, அதோடு கல்வி மற்றும் வணிகத்தில் அவரது நம்பமுடியாத பணிக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவால் '40 வயதிற்குட்பட்ட 40 தொழிலதிபர்கள்’ பட்டியலில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆண்ட்ரூ பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் விருந்தினர் விரிவுரையாளராகவும், பல நிகழ்வுகளில் நடுவர் மன்ற உறுப்பினராகவும் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார், மேலும் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு தொடர்ந்து தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வந்துள்ளார். தற்போது, சூரத்தில் உள்ள ஒய்எம்சிஏ-வின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

படைப்பாளர், இயக்குனர், மற்றும் த ச்சோசன் தொடரின் இணை எழுத்தாளர்
25 வயதில், டல்லாஸ் ஜென்கின்ஸ் ஹோம்டவுன் லெஜண்ட் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார், இது வார்னர் பிரதர்ஸால் விநியோகிக்கப்பட்டது. 20 ஆண்டுகளில், அவர் யுனிவர்சல், லயன்ஸ்கேட், பியூரிஃப்ளிக்ஸ், ஹால்மார்க் சேனல் மற்றும் அமேசான் ஆகியவற்றிற்காக ஒரு டஜன் திரை மற்றும் குறும்படங்களை இயக்கி தயாரித்துள்ளார். அவர் இப்போது எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார், இதுவரை வரலாறு காணாத மிகப்பெரிய பொதுமக்களின் நிதியுதவியுடன், இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய பல பருவத் தொடரான த ச்சோசன் என்ற தலைப்பில் தயாரித்து வருகிறார். இது ஒரு உலகளாவிய நிகழ்வு, தி ச்சோசன் தொலைக்காட்சி தொடர், வரலாற்றிலேயே ரசிகர்களின் நிதி உதவியால் மாத்திரம் இயக்கப்படும் ஒரு பெரும் காவியமாகும், மேலும் இது உலகளவில் 520 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ் மற்றும் பீகாக் போன்ற முக்கிய ஸ்ட்ரீமிங் சேவைகளில் இது இடம்பெறுகிறது, அதே நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட மொபைல் மற்றும் டீவி பயன்பாடுகளில் அனைத்து காலங்களையும் இலவசமாக பார்க்கலாம். இது 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் திரையரங்குகளில் திரையிடப்பட்ட சிறப்பு காட்சிகள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ்-ல் $35 மில்லியனுக்கு மேல் வசூலித்துள்ளது (அதற்கு பின் சில வாரங்களில் இது இலவசமாக ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று பார்வையாளர்கள் அறிந்திருந்தும் அவர்களால் பணம் கொடுத்து பார்க்கப்பட்டது).

பேச்சாளர், ஆசிரியர் போதகர், வில்லோ க்ரீக் கம்யூனிட்டி ச்சர்ச்
திருச்சபைகள், மாநாடுகள் மற்றும் பல்கலைக்கழக தேவாலயங்களில் சர்வதேச பேச்சாளராக விளங்கும் மேகன் ஃபேட் மார்ஷ்மென், இந்த தலைமுறைக்கு முன்னணி குரலாக வளம் வருகிறார். வில்லோ க்ரீக் கம்யூனிட்டி ச்சர்ச்-ல் போதகராகவும், ஹியூம் லேக் கிறிஸ்டியன் கேம்ப்ஸில் மகளிர் ஊழியத்தில் இயக்குனராகவும் பணியாற்றும் இவர், தற்போது ஊழியப் படிப்பில் முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார்.
கலிஃபோர்னியா, லாங் பீச்சில் உள்ள ஆர்பர் ரோட்டில் உள்ள தனது வீட்டு திருச்சபையிலும் அவர் பெண்களை வழிநடத்தி வருகிறார். மேகன் சமீபத்தில் பியூட்டிஃபுல் வேர்டு எனும் வேதாகம தின தியானத்தை வெளியிட்டார்: ஜான் (2022, ஹார்பர் காலின்ஸ்), அதோடு வேத ஆராய்ச்சி புத்தகமான மென்ட் ஃபார் குட் (2020, ஸோண்டர்வன்) என்ற புத்தகத்தையும் எழுதினார், மற்றும் செல்ஃப்லெஸ் (2017, டேவிட் சி. குக்) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதோடு கூட செவன் ஃபேமிலி மினிஸ்ட்ரி எசன்ஷியல்ஸ் என்ற புத்தகத்தை டாக்டர் மைக்கேல் அந்தோனியின் எசன்ஷியல்ஸ் (2015, டேவிட் சி. குக்) அவர்களுடன் இணை ஆசிரியராக எழுதியுள்ளார்.
28th & 29th March 2023 | 7:00pm to 8:30pm